/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பென்காக் சிலாட் போட்டி கிருஷ்ணசாமி பள்ளி சாதனை
/
பென்காக் சிலாட் போட்டி கிருஷ்ணசாமி பள்ளி சாதனை
ADDED : அக் 24, 2024 06:58 AM

கடலுார்: புதுச்சேரியில் நடந்த மண்டல அளவிலான பென்காக் சிலாட் போட்டியில் 7 மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆப் எக்சலன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் 1 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். இதேபோன்று, விழுப்புரத்தில் நடந்த மாநில அளவிலான தமிழ்நாடு பென்காக் சிலாட் போட்டியில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் 10 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
இதில், தங்கம் வென்ற மாணவி நேகாஸ்ரீ, லடாக்கில் நடக்க உள்ள இளையநிலை கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போட்டியில் வென்ற மாணவ, மாணவிகள், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜ்குமார், அறிவுடைநம்பி, புஷ்பராஜ், யுவஸ்ரீ, பயிற்சியாளர் சுதர்சன் ஆகியோரை தாளாளர் ராஜேந்திரன் பாராட்டினார்.
பள்ளி முதல்வர் சாந்தி பாண்டியன், ஒருங்கிணைப்பாளர்கள் மாலா நடராஜன், முத்துகிருஷ்ணன் உடனிருந்தனர்.