ADDED : பிப் 27, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாநில துணைத் தலைவர் மீரா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற அதிகாரி திருமலை முன்னிலை வகித்தார். உதவி செயலாளர் யயாதிராவ், அமைப்பு செயலாளர் குருபிரசாத் கண்டன உரையாற்றினர்.
தாலுகா வங்கி ஊழியர் சங்க தலைவர் லட்சுமணன், பரமேஸ்வரி, சண்முகப்பிரியா, ராஜேஷ் கண்ணா உட்பட பலர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தத்தின்படி, 15 நாட்கள் வழங்கப்படும் செயல் திறன் ஊக்கத்தொகையை 5 நாட்கள் மட்டும் வழங்கியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செயற்குழு உறுப்பினர் வினோத் நன்றி கூறினார்.
