/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேங்க் ஆப் பரோடா 48வது ஆண்டு விழா
/
பேங்க் ஆப் பரோடா 48வது ஆண்டு விழா
ADDED : ஜன 02, 2025 06:38 AM
கடலுார்; கடலுார் பேங்க் ஆப் பரோடா வங்கி மெயின் கிளை துவங்கி 48 வது ஆண்டு துவக்க விழாவையொட்டி நேற்று வங்கியில் வாடிக்கையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கடலுார் பேங்க் ஆப் பரோடா வங்கியின் மெயின் கிளை துவங்கி 48 வது ஆண்டு துவங்குவதையொட்டி விழா நடந்தது. ஓய்வு பெற்ற ஊழியர் ஸ்ரீதர் வரவேற்றார். முதன்மை மேலாளர் அனுராதா தலைமை தாங்கினார். வாடிக்கையாளர்கள் முத்து கலர் லேப், சீேஷல்ஸ் சுபா முத்துக்குமார், சங்கர் பிரகாஷ், மகேந்திரன், குத்துவிளக்கேற்றினர்.
கடன் அலுவலர் சிவப்பிரகாசம், கடன் வசூல் அலுவலர் பாலசரவணன், துணை மேலாளர் புனிதா, வேளாண் கடன் அலுவலர் வரபிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை தருமாறு முதன்மை மேலாளர் அனுராதா கேட்டுக்கொண்டார்.

