தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகள்: காங்., வேட்பாளர் உறுதி

 கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகள்: காங்., வேட்பாளர் உறுதி

 கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகள்: காங்., வேட்பாளர் உறுதி


ADDED : ஏப் 13, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 03:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என காங்., வேட்பாளர் சந்திரசேகரன் பேசினார்.

கடலுார் சட்டசபை தொகு தி காங்., வேட்பாளர் சந்திரசேகரன் நேற்று காலை கடலுார் கடற்கரை சாலையில் உள்ள சர்ச் மற்றும் ஒன்றிய பகுதியான ரெட்டிச்சாவடி, சின்ன காட்டுப்பாளையம், பூசாரிப்பாளையம், மதலப்பட்டு, கீழ்அழிஞ்சிப்பட்டு, சிங்கிரிகுடி, கிளிஞ்சிக்குப்பம், புதுக்கடை, நல் லாத்துார், தென்னம்பாக்கம், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், மேலழிஞ்சிப்பட்டு, இருசம்பாளையம் ஆகிய பகுதிகளில், நேற்று ஓட்டு சேகரித்தார்.

அவருடன், அய்யப்பன் எம்.எல்.ஏ., புகழேந்தி, காங்., மாவட்ட தலைவர் ரங்கமணி, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களிடம் சந்திரசேகரன் பேசியதாவது:

கிராம பகுதிகளில் தேவையான சாலை, குடிநீர், உள்ளிட்ட கூடுதல் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும். நுாலகம், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மைதானங்கள் கொண்டு வரப்படும். இவற்றை நிறைவேற்ற நீங்கள் கை சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., செயற்குழு உறுப்பினர் விக்ரமன், ஒன்றிய செயலாளர்கள் விஜயசுந்தரம், தனஞ்செயன், மகேஷ், பொருளாளர் கவாஸ்கர், இளைஞர் காங்., முன்னாள் மாவட்ட தலைவர் கலையரசன், வி.சி., கட்சி மாவட்ட தலைவர் கலைமோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், குளோப், மாதவன் உட்பட பலர் கலந்து ண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us