/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சில்வர் கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி துவக்கம்
/
கடலுார் சில்வர் கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி துவக்கம்
கடலுார் சில்வர் கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி துவக்கம்
கடலுார் சில்வர் கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி துவக்கம்
ADDED : செப் 11, 2025 03:29 AM

கடலுார்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மண்டல அளவிலான தமி ழ்நாடு முதல்வர் கோப்பைக்கான பீச் வாலிபால் போட்டி கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் நேற்று காலை நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் கிருஷ்ணகிரி, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, விழுப் புரம், கடலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள் 40 அணிகளாக பங்கேற்று விளையாடினர்.
தொடர்ந்து வெற்றி பெறும் மாணவ மாணவிகள் அடுத்த கட்டமாக மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
மேலும் போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.