/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா அணிகளை வீழ்த்தி சாதனை
/
ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா அணிகளை வீழ்த்தி சாதனை
ADDED : டிச 19, 2024 06:57 AM

விருத்தாசலம்; கோவாவில் நடைபெறும் ஆசிய ரோல்பால் போட்டியில் ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா அணிகளை வீழ்த்தி இந்திய வீரர், வீராங்கனைளகள் அரையிறுத்திக்கு தகுதி பெற்றனர்.
நான்காவது ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, கோவா மாநிலம், மனோகர் பாரிக்கர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 16 முதல் 19ம் தேதி (இன்று) வரை நடக்கிறது.
இதில், இந்திய அணியில் வீராங்களைகள் சார்பில் தமிழக மாணவிகள் வசிமா பானு, மகதி முத்துக்குமார் மற்றும் ஆடவர் அணியில் கடலுார் மாணவர் சிவச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதில், அரையிறுதி போட்டியில் ஸ்ரீலங்காவை வீழ்த்தி இந்திய ரோல் பால் அணியின் வீராங்கனைகளும், இந்தோனேஷியாவை வீழ்த்தி ஆடவர் அணியும் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களை தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், தமிழ்நாடு ரோல்பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், இந்திய அணி பயிற்சியாளர் ராஜசேகர், திருச்சி செயலாளர் மதுநிதா, மாநில துணை செயலாளர் கண்மணி வாழ்த்து தெரிவித்தனர்.

