sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு

/

பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு

பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு

பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : செப் 16, 2025 11:53 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்; குடிபோதையில் பீர் பாட்டில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வடலுார் அடுத்த சேராக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 38; இவர், அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, சுவாமியை மறைப்பதாக கூறி அவரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டனர்.

இதனை தட்டிக்கேட்ட விஜயலட்சுமியின் கணவர் சக்திவேலை, 45; ஒரு கும்பல் பீர் பாட்டிலால் தாக்கியது. மேலும், விஜயலட்சுமியின் புடவையை இழுத்து மனபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த செல்லதுரை, சின்னதுரை, செல்வகுமார் தனுஷ் ஆகிய 4 பேர் மீதும் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us