/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயனாளிகள் பட்டியல்: அதிகாரிகள் ஆய்வு
/
பயனாளிகள் பட்டியல்: அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஏப் 16, 2025 08:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் மலைமேடு பகுதியில் மனைப்பட்டா பயனாளிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் மலைமேடு பகுதியில் 94 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் குறித்து மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, ஆய்வுக்குழு துணை அலுவலர் சுமித்ரா மற்றும் வருவாய்த்துறையினர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
தாசில்தார் இளஞ்சூரியன், ஆர்.ஐ. பிரேம்குமார், வி.ஏ.ஓ.க்கள் ஜெயமூர்த்தி, சர்மா, நில அளவையாளர் ரமேஷ் உடனிருந்தனர்.