/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பவானி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
பவானி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 15, 2025 11:47 PM

விருத்தாசலம்: கண்டப்பங்குறிச்சி பவானி வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர்.
மாணவி பிரியதர்ஷினி முதல் மதிப்பெண், ராஜலட்சுமி இரண்டாமிடம், மதுபாலா மூன்றாமிடம் பிடித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்விக்குழும நிறுவன தலைவர் நாராயணன், செயலாளர் மகாலட்சுமி நாராயணன் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நிர்வாக அலுவலர் பொன்சடையமுத்து பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் ஜெசுவந்தி உடனிருந்தார்.
நடப்பாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 425 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு, 100 சதவீதம் இலவச கல்வி வழங்கப்படும் என தாளாளர், செயலாளர் தெரிவித்தனர்.