/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை
/
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை
ADDED : அக் 13, 2025 12:07 AM

நெய்வேலி; நெய்வேலி தொகுதிக்குட்பட்ட வெங்கடாம்பேட்டை ஊராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
தமிழக அரசின் 15வது நிதிக்குழுவின் கீழ் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை சபா. ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
இதில் பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சபா. பாலமுருகன், வட்டார டாக்டர்கள் பாலச்சந்தர், ஸ்ரீதர்ஷினி, அகல்யா குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தலைவர் வீர ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி ராம வெங்கடேசன், கோவிந்தராஜ், தண்டபாணி இளைஞர் அணி அமைப்பாளர் பாக்யராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.