/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வங்கி புதிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை
/
வங்கி புதிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை
ADDED : அக் 27, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி துவங்கியது.
கருவேப்பிலங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்க செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்.
வங்கி செயலாளர் கமலக்கண்ணன், பரவளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் குமரன், காங்., மாவட்ட பொதுச் செயலாளர் துரைசாமி, வங்கி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

