ADDED : ஜன 30, 2024 06:04 AM

புவனகிரி, : பூ.மணவெளி அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
புவனகிரி அடுத்த பூ.மணவெளி பாட்டை வீதியில் பாலவிநாயகர், பாலமுருகன், சப்த கன்னியர், துர்க்கை, அக்னி மாரியம்மன் கோவில், புதுப்பிக்கப்பட்டு புதிய விக்ரகங்கள், மகா மண்டபம் அமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியா வாஜனம், கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இரவு எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜையும், தொடர்ந்து, கடம் புறப்பாடு துவங்கி, 9:30 மணிக்கு மேல் 10.00 மணிக்குள், கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். மாலை 6.00 மணிக்கு சாமி வீதியுலா நடந்தது. கும்பாபிேஷகத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.