/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி பாரதி பள்ளி நிர்வாகிக்கு விருது
/
புவனகிரி பாரதி பள்ளி நிர்வாகிக்கு விருது
ADDED : ஜன 02, 2025 06:42 AM

புவனகிரி; புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை விழாவில், அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.
புவனகிரியில், கண்ணதாசன் இலக்கிய பேரவையின் 32ம் ஆண்டு முப்பெரும் விழா நடந்தது. பஸ் உரிமையாளர் பாலாஜி தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல், தொழிலதிபர்கள் ரத்தினசுப்ரமணியர்,ஜெகன், ராம்குமார், ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், தலைமையாசிரியர் துரைமணிராஜன் முன்னிலை வகித்தனர்.
பேரவை தலைவர் கல்யாணசுந்தரம் நோக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் பாரதி பள்ளி நிர்வாகி அன்பழகன், தமிழ் பேரவை தலைவர் பாஸ்கரன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெயபாலன், பேராசிரியர் கோகுலாச்சாரியார் ஆகியோரின் சேவைகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
முன்னதாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழை பட்டிமன்ற நடுவர் திருவாரூர் சண்முகவடிவேல் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

