ADDED : மார் 12, 2024 05:37 AM
அ நிறம் | அளவு
வடலுார், : குறிஞ்சிப்பாடி அருகே தாழை ஓடை வாய்க்காலில் ரூ. 52 லட்சத்தில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது.
வடலுார் அடுத்த அயன்குறிஞ்சிப்பாடி தாழை ஓடையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, ஓடையின் குறுக்கே புதிய பாலம் கட்ட ரூ. 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பூமி பூஜை நேற்று நடந்தது.
மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், பேரூராட்சி சேர்மன் கோகிலா குமார், துணை சேர்மன் ராமர், இளநிலை பொறியாளர் ஜோதிமுருகன், இளநிலை உதவியாளர் முருகவேல் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
