ADDED : ஏப் 04, 2026 04:18 PM

சேத்தியாத்தோப்பு: புவனகிரி அ.தி.மு.க., வேட்பாளர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, ஓட்டு சேகரித்தார்.
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி குறுக்குரோடு பகுதிக்கு, நேற்று அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழி தேவன் வந்தார். அங்குள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஒட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சீரழியும் நிலை உள்ளது.
இந்த நிலை மாற இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து பொதுச்செயலாளர் பழனிசாமி, முதல்வராக வாய்ப்பு கொடுங்கள்,' என்றார்.
இந்த நிகழ்வில், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர்கள் உமா மகேஸ்வரன், பாலசுந்தரம், ஜெ., பேரவை தலைவர் நன்மாறன், மாநில துணை செயலாளர் பாலமுருகன், அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், அவைத்தலைவர் செல்வராசு, கருப்பன் ஜெயசீலன், பிரித்திவி, ஜெ.,பேரவை ஒன்றிய செயலாளர் ராஜாசாமிநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் சேர்மன் லட்சுமி நாராயணன், நகர செயலாளர் மணிகண்டன், வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
:
