ADDED : மார் 17, 2026 04:47 AM

புவனகிரி: புவனகிரி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. புவனகிரி சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணி தலைமையிலான அலுவலர்கள், புவனகிரியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தை நேற்று முன்தினம் மாலை பூட்டி சீல் வைத்தனர்.
அதைத் தொடர்ந்து புவனகிரி பேரூராட்சி சேர்மன் அறையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
புவனகிரி தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி அலுவலகம், பத்திரப்பதிவு, கிராம ஊராட்சி அலுவலகங்கள், நுாலகம், மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலங்களில் இருந்த முதல்வர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது.
தனியார் மற்றும் அரசு சுவர்களில் எழுதியிருந்த விளம்பரங்கள் அழிகப்பட்டு, கடை வீதியில் இருந்த அரசியல் கட்சியினர் பேனர்களும் அகற்றப்பட்டது.
குறிஞ்சிப்பாடி தேர்தல் அறிவிப்பு காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.
இதையொட்டி, குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு தாசில்தார் விஜய் ஆனந்த் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.
