ADDED : ஆக 31, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
கடலுார்: நடந்து சென்ற பீகார் தொழிலாளி அடையாளம் தெரியாத ஆட்டோ மோதி இறந்தார்.
பீகாரைச் சேர்ந்தவர் ரெகல்சிங்,48; இவர், கடலுாரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கடலுார் – வெள்ளக்கரை சாலையில் எம்.புதுாரில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, ரெகல்சிங் இறந்து விட்டதாக கூறினார்.
புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
