நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : ஆலடி அருகே பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் ஜெகன்ராஜ், 30; கடந்த மாதம் 11ம் தேதி, விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள மெடிக்கல் வாசலில், தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, 50 ஆயிரம் மதிப்பிலான பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

