UPDATED : செப் 18, 2026 10:04 PM
ADDED : செப் 18, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
வடலூர்:
பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வடலுார், ஆர்.சி., சகாய மாதா தெருவை சேர்ந்தவர் இளையபெருமாள் மகன் தமிழரசன்,25; இவர் நேற்று முன்தினம் தனது பல்சர் பைக்கை வீட்டின் முன் நிறுத்தவிட்டு துாங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.
