ADDED : நவ 21, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் மேற்கு கோபுர வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்ராஜா, 43. இவரது பைக், கடந்த 12ம் தேதி மாயமானது.
விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த விஜயபுரத்தை சேர்ந்த டேனியல் பாபு, 51; என்பவர் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.

