தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைக் திருடியவர் கைது

 பைக் திருடியவர் கைது

 பைக் திருடியவர் கைது


ADDED : மார் 28, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்: பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்

வடலூர், ராகவேந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த அரவிந்தன், 34, இவர் கடந்த மாதம், 2ம் தேதி, சத்திய ஞான சபையில் வழிபட சென்று, தனது பைக்கில் நிறுத்தி சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

மேலும் இதுபோல வடலூர் நகரம் மற்றும் சுற்று பகுதிகளில் பைக்குகள் திருடப்படுவது குறித்து போலீசாருக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் வடலுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், கருங்குழி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவரிடம் போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் அவர் வடலுார் , ரயிலடியை சேர்ந்த முகமது ரியாஸ், 24, என்றும் பைக்கை திருடியதும் தெரிய வந்தது.

போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us