ADDED : ஆக 24, 2026 03:40 PM
குள்ளஞ்சாவடி, ஆக. 25-
இரு தரப்பு மோதல் தொடர்பாக, 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் ஜனார்த்தனன் மனைவி வளர்மதி,37; அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் திருமுருகன்,44; மழைநீர் வீட்டின் உள்ளே வருவதை தடுக்க வளர்மதி தனது வீட்டின் எதிரே அணை கட்டியது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பும் ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இகுறித்த புகார்களின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் இருதரப்பினர் மீதும் தனித்தனியே வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட திருமுருகன், அவரது மகன்கள் ஜெகன், 25, மதன், 23, சேகர் மகன் ராகுல் டிராவிட், ஐயர் மகன் சங்கர், வரதராஜன், தசனி (எ) ஹரிஷ், செல்வம், ராகுல் காந்தி, வளர்மதி, அச்சுதன் உள்ளிட்ட 12 பேரை தேடிவருகின்றனர்.
