தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு


UPDATED : செப் 29, 2026 10:30 PM

ADDED : செப் 29, 2026 10:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 10:30 PM ADDED : செப் 29, 2026 10:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு:வீட்டுமனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் நடுத்தெருவை சேர்ந்த கோதண்டபாணி மனைவி குணசுந்தரி,44; அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் மனைவி ருக்குமணி,40;

இருவருக்கும் இடப்பிரச்னை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து உள்ளது. இந்நிலையில் ருக்குமணி அப்பகுதியில் உள்ள தமது வீட்டு மனையை சுத்தம் செய்த போது கோதண்டபாணி, மனைவி குணசுந்தரி, மகன் கோபிநாத் ஆகிய 3 பேரும் சேர்ந்து, ருக்குமணி, மகன் பாரதியை தாக்கினர்.

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இருதரப்பு தாக்குதலில் படுகாயமடைந்த கோபிநாத், ருக்குமணி கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து இருதரப்பு புகார்களின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து கோதண்டபாணி, குணசுந்தரி, கோபிநாத், ருக்குமணி, பாரதி ஆகியோரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us