/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதரப்பு மோதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு
/
இருதரப்பு மோதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : மே 07, 2025 01:06 AM
நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டையில் மின் கம்பி அறுந்து கிடந்தது சம்மந்தமாக ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் குணசேகர், வைத்தியநாதன். குணசேகர் வீட்டிற்கு செல்லும் மின்சார கம்பி அறுந்து கிடந்தது. இதனையறிந்த குணசேகர் மின்கம்பியை யாரோ அறுத்து விட்டனர் என பேசிக் கொண்டிருந்தார். அப்போது வைத்தியநாதன், இவரது மகன் செந்தில், மணிவண்ணன், சிவபெருமாள் ஆகிய நான்கு பேரும் தங்களை தான் குணசேகர் பேசுவதாக நினைத்து கேட்டதால் தகராறு ஏற்பட்டு இருதரப்பும் தாக்கிக் கொண்டனர்.
இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், வைத்தியநாதன், செந்தில், மணிவண்ணன், சிவபெருமாள் உட்பட 6 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.