தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இருதரப்பு மோதல்:  இருவர் கைது

இருதரப்பு மோதல்:  இருவர் கைது

இருதரப்பு மோதல்:  இருவர் கைது


ADDED : நவ 02, 2024 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2024 07:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இருதரப்பினர் தாக்கிக் கொண்டது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் சேகர் மகன் வசந்தகுமார். கடலுார் சாலையை சேர்ந்தவர் குணா. நண்பர்கள். கடந்த ஆறு மாதத்திற்கு முன் குணாவிடம் இருந்து வசந்தகுமார் கடன் வாங்கியுள்ளார்.

அந்த பணத்தை நேற்று முன்தினம் திருப்பி கேட்டதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குணா தனது ஆதரவாளர்கள் 8 பேருடன் வசந்தகுமார் வீட்டிற்கு சென்றபோது, இருதரப்பு மோதல் ஏற்பட்டது. அதில், வசந்தகுமார், அவரது சகோதரர்கள் ஆனந்தகுமார், விஜயகுமார் காயமடைந்தனர்.

இது குறித்த விஜயகுமார் புகாரின் பேரில், குணா உட்பட நால்வர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சக்தி நகர் ஹரிபாபு மகன் நீலாம்பரன், 26, ரவி மகன் முகிலன், 25, ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us