ADDED : மார் 26, 2026 10:58 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் மூத்த வழக்கறிஞர் சிவமணி பிறந்த நாள் விழா நடந்தது. அவர், கடலுாரில் உள்ள அலுவலகத்தில் மனைவி கீதாவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இவர்களுக்கு வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.
விழாவில் தனலட்சுமி சீனிவாசன் மண்டல மேலாளர் ஜெயராமன், ஏ.ஆர்.சி. கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் அருண், வழக்கறிஞர்கள் ராஜன், அய்யனார், சுப்பிரமணியன், சசிதரன், அருணகிரிநாதன், மோனிஷா, குமாஸ்தா பத்மநாபன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், எம்.எஸ்.அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
