ADDED : ஏப் 23, 2026 10:35 PM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: சட்டசபை தேர்தலையொட்டி பூத் ஏஜென்ட்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோர்வு அடையாமல் இருக்க உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை நேற்று காலை முதல் அரசியல் கட்சி நிர்வாகிகள் வழங்கி வந்தனர்.
மேலும் பூத் ஏஜென்ட்கள், தொண்டர்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்க தனியாக சமையல் கலைஞர்களை நியமித்து சமைத்து பார்சல் செய்யப்பட்டு மதியம் வழங்கப்பட்டது.
மேலும் சில அரசியல் கட்சிகள் சிக்கன் பிரியாணி வழங்க ேஹாட்டல்களில் ஆர்டர் செய்து இருந்ததால் பிரியாணி மாஸ்டர்கள் படு 'பிசியாக' காணப்பட்டனர்.
