ADDED : பிப் 25, 2026 05:07 AM
உ ள்ளாட்சிப் பதவிகள் துவங்கி, லோக்சபா வரை தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வது கலாசாரமாக விட்டது.
மேலும், வேட்பாளர்கள் பிரசாரத்தின்போது தொண்டர்களுக்கு உ.பா., பிரியாணி வழங்கப்படும். குறிப்பாக ஆண்களுக்கு உ.பா.,வுடன் பிரியாணி; பெண்களுக்கு புடவை, பிரியாணி, ரொக்கம் தரப்படும். குறிப்பிட்ட சில கட்சிகளை தவிர்த்து மற்ற மாநில, தேசிய கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேர்தல் நேரத்தில் மட்டன், இறால் பிரியாணிகளை காட்டிலும் விலை குறைவான சிக்கன் பிரியாணிக்கு மவுசு அதிகம். முட்டையுடன் பிரியாணி தரும்போது தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் பம்பரம்போல சுழன்று, தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.
தலா 100 ரூபாய் வீதம் பிரியாணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு விடும். இதற்காக பிரசாரத்திற்கு வரும் தொண்டர்கள் எண்ணிக்கையை பொறுத்து, முன்கூட்டியே பிரியாணிக்கு ஆர்டர் தரப்படும்.
இதனால் தேர்தல் நேரங்களில் அனைத்து அசைவ ஓட்டல்களும் பிசியாக காணப்படும். ஆனால், கடந்த சில தேர்தல்களாக பெரிய ஓட்டல்களுக்கு மாற்றாக, சாலையோர பிரியாணி கடைகளுக்கும் மவுசு அதிகரித்துள்ளது. இவற்றில் 70 ரூபாய்க்கு முட்டையுடன் பிரியாணி வழங்குவதும், குறித்த நேரத்தில் டெலிவரி செய்வதும் நடக்கிறது.
இதனால் சாலையோர கடைகளில் பார்சல் விற்பனை பலமடங்கு அதிகரித்து வருவதால், தேர்தல் நேர பிரியாணி கடைகள் புற்றீசலாக அதிகரித்துள்ளன.
