/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பா.ஜ., நகரத் தலைவர் கோரிக்கை
/
மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பா.ஜ., நகரத் தலைவர் கோரிக்கை
மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பா.ஜ., நகரத் தலைவர் கோரிக்கை
மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பா.ஜ., நகரத் தலைவர் கோரிக்கை
ADDED : ஜன 20, 2024 06:08 AM

கடலுார் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லுார் வட்டாரத்திற்குட்பட்ட மானாவாரி விவசாயிகள் சுமார் 60ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர்.
பருவமழை தவறியதாலும், மழையின் அளவு குறைந்ததாலும் மக்காச்சோள பயிர்களில் கதிர்கள் வந்த பயிரில் மணி பிடிக்காமல் போனது. நன்றாக முளைத்த பயிர்கள் படைப்புழுவின் தாக்குதலால் முற்றிலுமாக அழிந்தது. வானம் பார்த்த பூமியான மானாவாரி விவசாய நிலங்களில், பயிரிட்ட சோளம் அழிந்துபோனதால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகினர்.
விவசாயிகள் சார்பில் பா.ஜ., திட்டக்குடி நகரத் தலைவர் பூமிநாதன் கூறியதாவது, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயிர் செய்யக்கூடிய மக்காச்சோளம் .இந்தாண்டு விவசாயிகளுக்கு அதுவும் பொய்த்துப்போனது. ஏக்கருக்கு 30ஆயிரம் முதல் 40ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். நகையை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் பெற்றும் பயிரிட்டனர்.
அடகு வைத்த நகையை மீட்கவும், பயிர்க்கடனை அடைப்பதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டே குழந்தைகளின் கல்வி செலவு, உணவு, மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியும். தற்போது முதலுக்கே மோசம் ஏற்பட்டுள்ளதால், மேலும் கடனை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட மானாவாரி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகள், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்கவேண்டும். தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அறிவித்த நிவாரணத்தைப்போலவே, மங்களூர், நல்லுார் வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். இல்லையேல் விவசாயிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து பா.ஜ., கட்சி சார்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.