/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
/
பா.ஜ., தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
ADDED : நவ 06, 2025 05:16 AM

கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம், இம்பீரியல்ரோடு, வள்ளி விலாஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ., மாநில செயலாளர் வினோஜ் செல்வம் பங்கேற்று, கடலுார் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 5 சட்டசபை தொகுதியின் அமைப்பாளர், இணை அமைப்பாளர் மற்றும் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
விருத்தாசலம் சட்டசபை தொகுதி இணை அமைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் நெய்வேலி சட்டசபை தொகுதி அமைப்பாளர் காசி தங்கவேல், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் விருத்தாசலம் தொகுதி அமைப்பாளர் மணிகண்டன், குறிஞ்சிப்பாடி இணை அமைப்பாளர் அறிவழகன், பார்வையாளர் ஜெனித் மேகநாதன், பண்ருட்டி அமைப்பாளர் ஜீவா வினோத்குமார், நெய்வேலி பார்வையாளர் துரை செந்தாமரைக்கண்ணன், நெய்வேலி இணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், பண்ருட்டி இணை அமைப்பாளர் மோகன், விருத்தாசலம் பார்வையாளர் சுபஸ்ரீ, கடலுார் இணை அமைப்பாளர் உமாசந்திரன் மற்றும் கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

