ADDED : ஜன 24, 2025 06:27 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ., தமிழழகனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு மாவட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. முதற்கட்டமாக 33 மாவட்ட தலைவர்கள் பட்டியல், 19ம் தேதி வெளியானது.
அதில் கடலுார் மேற்கு மாவட்ட தலைவராக முன்னாள் திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ.,தமிழழகன், அறிவிக்கப்பட்டார். மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்ட தமிழழகனுக்கு, பா.ஜ., மூத்த உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
