ADDED : பிப் 06, 2026 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கடலுார் கிழக்கு மத்திய, மாநில அரசு தொடர்பு பிரிவின் பா.ஜ., கிழக்கு மாவட்ட செயலாளராக, வழக்கறிஞர் வீரமேதினி திலிபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் அறிவுறுத்தலில், பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம், மாநில செயலாளர் அஸ்வத்தம்மன், அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் சூர்யாநாராயணன் பரிந்துரையில், கடலுார் கிழக்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவின் மாவட்ட அமைப்பாளர் முகுந்தன், மாவட்ட தலைவர் அக்னிகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமித்துள்ளனர்.
அவருக்கு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

