ADDED : ஜூன் 11, 2026 08:09 AM

அ நிறம் | அளவு
கடலுார்: குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பா.ஜ., மாநில நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி, அண்ணாமலை துவங்கிய இயக்கத்தில் இணைந்தார்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி பொறுப்பாளராக இருந்த தமிழக பா.ஜ., பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளர் மேகநாதன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
பா.ஜ.,விலிருந்து விலகிய அவர், அண்ணாமலை புதிதாக துவங்கி உள்ள வி த லீடர்ஸ் அமைப்பில் இணைந்தார்.
