/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சியில் சாலை அமைக்க பா.ஜ., மகளிரணி நிதியுதவி
/
ஊராட்சியில் சாலை அமைக்க பா.ஜ., மகளிரணி நிதியுதவி
ADDED : டிச 31, 2024 06:57 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தனியார் இடத்தை விலைக்கு வாங்கி, சாலை அமைக்க பா.ஜ., மகளிரணி சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட் சிக்குட்பட்ட ஹால்மாக் நகர், ஏ.ஆர்.எஸ்., நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த நகர்களுக்கு தனியார் இடம் வழியாக சாலை உள்ளது. அந்த இடத்தின் உரிமையாளர் சாலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, வேலி அமைத்தார். இதனால், ஓராண்டாக மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தனியார் இடத்தின் வழியாக பொதுமக்கள் பயன்படுத்தவும், சாலை அமைக்கவும் அந்த இடத்தை விலைக்கு வாங்கவும், கல்கி பிரபஞ்ச அறக்கட்டளை நிறுவனர், கடலுார் மேற்கு பா.ஜ., மாவட்ட மகளிரணி செயலாளர் அர்ச்சனா ஈஷ்வர் நிதியுதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் சற்குருநாதன், நிர்வாகிகள் கண்ணதாசன், சரஸ்வதி, சங்கிதா, சுதா, இளவரசி உட்பட பலர் பங்கேற்றனர்.