ADDED : ஜன 11, 2026 06:39 AM

விருத்தாசலம்: தி.மு.க., அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ., வினர் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் எழும்பூரில் உள்ள தனியார் டி.வி., அலுவலகத்தில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் சூர்யா பங்கேற்றார்.
அப்போது, அந்த விவாத நிகழ்ச்சியில் அவருக்கும்ல தி.மு.க., ஆதரவாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தி.மு.க., ஆதரவாளர் மற்றும் அவரது தரப்பினர், பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் சூர்யா மற்றும் பா.ஜ., நிர்வாகிகளை தாக்கினர்.
இந்நிலையில் இதனை கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரையில், பாஜ., நகர தலைவர் அருள்ஜோதி தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதியில்லை என்று கூறி, பாஜ., வினர் 14 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
