/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : பிப் 05, 2024 04:22 AM

மந்தாரக்குப்பம் : கம்மாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜ., கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மந்தாரக்குப்பம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். ஒ.பி.சி., அணி பொதுச் செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் தேவபெருமாள் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் முருகன், புதிய உறுப்பினர்களை சேர்த்து அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில், கிராமங்களில் பொது நிகழ்ச்சிகளை நடத்தி மத்திய அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
நிர்வாகிகள் செல்வமோகன், அரவிந்தன், ஜீவா, ராமசந்திரன், வினோத், செந்தில்நாதன், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

