/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மஞ்சக்கொல்லையில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
/
மஞ்சக்கொல்லையில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
ADDED : பிப் 06, 2024 04:47 AM

புவனகிரி, : புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லையில் பா.ஜ., சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
மேல்புவனகிரி ஒன்றிய பகுதிகளில் பா.ஜ., சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. நேற்று, முன்தினம் மஞ்சக்கொல்லையில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத்கமிட்டி அமைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் திருமாவளவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் புவனகிரி சட்டசபை தொகுதி பார்வையாளர் ஸ்ரீதரன், தொகுதி அமைப்பாளர் முருகன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
ஒன்றிய செயலாளர் அருண்குமார், கிளைத் தலைவர் சிவக்குமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சக்திவேல், தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராகேஷ், கட்சி நிர்வாகிகள் ராம்குமார், லட்சுமணன், ஹரிகிருஷ்ணன், அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.