/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மார்க்கெட் கமிட்டியில் பா.ஜ., வினர் மனு
/
மார்க்கெட் கமிட்டியில் பா.ஜ., வினர் மனு
ADDED : ஆக 12, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் மணிலா உடைக்கும் இயந்திர ஆலையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பா.ஜ., வினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம், பா.ஜ., நகர தலைவர் அருள்ஜோதி தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனு:
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் காட்சி பொருளாக உள்ள மணிலா உடைக்கும் இயந்திர ஆலை, எடைமேடை, கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
மாவட்ட பொருளாளர் சரவணன், செயலாளர் வெங்கடேசன், நகர நிர்வாகிகள் பூவராகவன், கிருஷ்ணராஜ், ஜெயராமன், செல்வராஜ் உடனிருந்தனர்.