ADDED : ஆக 15, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் சுதந்திர தினத்தையொட்டி பா.ஜ., சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்தது.
ஒன்றிய தலைவர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பழனியப்பன் வர வேற்றார். முன்னாள் பட்டியலின அணி மாநிலத் துணைத் தலைவர் வெற்றி வேல், மாநில பொதுக்குழு தியாகு, ஒன்றிய துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொதுச் செயலாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் மூத்த நிர்வாகி ஸ்ரீதரன், மாநில செயற்குழு திருமாவளவன், சுதந்திர தின நிகழ்ச்சி பொறுப்பாளர் வள்ளி ராதாகிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்தனர். நிர்வாகிகள் கோவிந்தசாமி, கனகராஜ், இளையமாறன், ஜோதி, ராமநாதன், சாந்தலட்சுமி பங்கேற்றனர்.
தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.