ADDED : மார் 02, 2026 03:25 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் பா.ஜ., தெருமுனை பிரசார நிறைவு விழா கூட்டம் நடந்தது.
பா.ஜ., ஊரக உள்ளாட்சி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். பா.ஜ., ஒன்றிய தலைவர் சுரேஷ், முன்னாள் ராணுவ பிரிவு கேப்டன் பாலசுப்ரமணியன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். மாநில மஸ்துார் சங்க துணை தலைவர் உமா பரமேஸ்வரன் வரவேற்றார்.
முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் செல்வி ராமஜெயம், பா.ஜ., மாநில செயற்குழு மணிகண்டன், மாநில செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார், பா.ம.க., தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், அ.ம.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் மோகன், த.மா.க., மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் பேசினர்.
கூட்டத்தில், ஓ.பி.சி., அணி முன்னாள் மாவட்ட தலைவர் குமார், அ.தி.மு.க., மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம், பா.ம.க., இளைஞரணி செயலாளர் செல்வ பிரதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் ஒன்றிய தலைவர் பரமகுரு நன்றி கூறினார்.
