/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., ஆய்வு கூட்டம் எச்.ராஜா பங்கேற்பு
/
பா.ஜ., ஆய்வு கூட்டம் எச்.ராஜா பங்கேற்பு
ADDED : அக் 11, 2024 06:18 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் பா.ஜ.க., உறுப்பினர் சேர்க்கை இயக்க பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி மற்றும் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினர்.
இதில் ஒ.பி.சி, அணி மாநில தலைவர் சாய்சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் சுகுமாரன், மாவட்ட பொது செயலாளர் வினோத்குமார், கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெனித் மேகநாதன் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் தாமோதரன் செய்திருந்தார்.
மண்டல தலைவர் ரங்கநாதன் நன்றி கூறினார்.