ADDED : மே 24, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: ஆப்ரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், கிழக்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் தேசியக்கொடி ஏந்தி கடலுாரில் பேரணி நடந்தது.
ஆப்ரேஷன் சிந்துார் கொண்டாடும் வகையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், கடலுாரில் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நடந்தது.
மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அண்ணாபாலம் சிக்னல் அருகில் துவங்கிய பேரணி பாரதி சாலை வழியாக மஞ்சக்குப்பம் தபால் நிலையம் வரை சென்றது. பேரணியில் கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.