/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வருக்கு கருப்பு கொடி; பொது நல இயக்கங்கள் தீர்மானம்
/
முதல்வருக்கு கருப்பு கொடி; பொது நல இயக்கங்கள் தீர்மானம்
முதல்வருக்கு கருப்பு கொடி; பொது நல இயக்கங்கள் தீர்மானம்
முதல்வருக்கு கருப்பு கொடி; பொது நல இயக்கங்கள் தீர்மானம்
ADDED : ஜூலை 06, 2025 03:28 AM

கடலுார் : கடலுார் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செம்மண்டலத்தில் நடந்தது.
கூட்டமைப்பு செயல் ஒருங்கிணைப்பாளர் திருவரசு தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், செல்வம், கஜேந்திரன், சையது முஸ்தபா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, உழைக்கும் தொழிலாளர் முன்னணி மாநில செயலாளர் சேகர், என்.ஜி.ஓ. முன்னாள் மாநில செயலாளர் கார்மேகவண்ணன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் கடலுார் பாதிரிக்குப்பத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். இக்கோரிக்கை நிறைவேறும் வரை தெருமுனை பிரசாரம், உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும், கடலுார் மாவட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு அளிப்பது.
கடலுாருக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினிடம் இப்பிரச்னை தொடர்பாக மனு அளிப்பது அல்லது கருப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.