/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் ரத்த தான முகாம்
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் ரத்த தான முகாம்
ADDED : ஆக 04, 2025 12:25 AM

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.
கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
அறக்கட்டளை செயலாளர் விஜயகுமார், முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் ஸ்ரீதரன், மாவட்ட ரத்த தான திட்ட மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் குழுவினர் ரத்த தான முகாமை நடத்தினர். இதில், 60 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குணசீலன், துணை பேராசிரியர் சிவகுமார், உடற்கல்வி இயக்குனர் வீரபாகு செய்திருந்தனர்.