/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம்
/
பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம்
ADDED : செப் 20, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
உளவியல் துறைத் தலைவர் அஸ்கர் அலி படேல் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அற்புதவேல் ராஜா வரவேற்றார்.
மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜுனியர் சுந்தரேஷ் சிறப்பு அழைப்பாரளாக பங்கேற்றார்.
ரத்த வங்கி டாக்டர் வள்ளுவன் தலைமையிலான குழுவினர், உளவியல் மற்றும் விளையாட்டு துறை மாணவ, மாணவிகள் 34 பேரிடம், இருந்து 34 யூனிட் ரத்தம் தானமாக பெற்றனர்.
ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் நீலகண்டன், காளிமுத்து செய்திருந்தனர்.