/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை கல்லுாரியில் ரத்ததான முகாம்
/
விருதை கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : பிப் 29, 2024 11:51 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் வளர்மதி தலைமை தாங்கினார். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஆங்கில துறை உதவி பேராசிரியர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜவேல் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், விருத்தாசலம் ரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் குலோத்துங்சோழன், செவிலியர்கள் கல்பனா, மகேஸ்வரி, ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் கீதா, ஆலோசகர் குமார் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர்.
மாணவர்களிடமிருந்து 59 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. ரத்ததானம் வழங்கிய மாணவர்களுக்கு, விருத்தாசலம் ஏகநாகயகர் கோவில், ஸ்ரீ பகவான் மகாவீர் பசுமட அமைப்பினர் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினர்.

