/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விக்னேஸ்வரா கல்லுாரியில் ரத்த தான முகாம்
/
விக்னேஸ்வரா கல்லுாரியில் ரத்த தான முகாம்
ADDED : பிப் 15, 2024 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : ஆலப்பாக்கம், கீழ் பூவாணிக்குப்பம் விக்னேஸ்வரா பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். பொது மேலாளர் ஜெயகணேஷ், சேர்மன் சீனிவாசன், ஆனந்த், சிவகுரு கலந்து கொண்டனர்.
டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் செவிலியர்கள் ஜெயலட்சுமி, அன்பு லட்சுமி, சுமையா பானு ஆய்வக நுட்பனர் தேவநாதன், தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய குழுவினர் மருத்துவ பணிகளை மேற்கொண்டனர்.
ரத்த தானம் வழங்கிய 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் குருலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.

