
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி ராமதாஸ் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.
விருத்தாசலம் ரோட்டரி சங்கம் மற்றும் கடலுார் ரோட்டரி ரத்த வங்கி சார்பில் நடந்த முகாமிற்கு, சங்க தலைவர் அன்புக்குமரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவசங்கரன், கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி பேராசிரியர் பரமசிவம், ரோட்டரி மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், கல்லுாரி இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, கடலுார் சுரேந்திரா மருத்துவமனை நிறுவனர் ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்தனர். மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ஓய்வு பெற்ற தலைமை மருத்துவர் தமிழரசி, ஒருங்கிணைப்பாளர் காமராஜ், டாக்டர்கள் அருண்குமார், பரிதி அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
செயலாளர் பிரபாகர் நன்றி கூறினார்.

