/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரத்தில் படகு சவாரி இயக்கம்
/
பிச்சாவரத்தில் படகு சவாரி இயக்கம்
ADDED : டிச 03, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில் நேற்று படகு சவாரி இயக்கப்பட்டது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனச்சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம். இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பிச்சாவரம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் மழை பெய்ததால், கடந்த 4 நாட்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்று மழை நின்றது. இதனால் நேற்று காலை முதல் பிச்சாவரத்தில் படகு சவாரி இயக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.