/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காற்றழுத்த தாழ்வு நிலையால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
/
காற்றழுத்த தாழ்வு நிலையால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
காற்றழுத்த தாழ்வு நிலையால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
காற்றழுத்த தாழ்வு நிலையால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
ADDED : நவ 25, 2025 05:15 AM

கடலுார்: கடலுார் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
கடலுார் மாவட்டத்தில், தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், நல்லவாடு, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை உட்பட 49 மீனவ கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடித்து கடலுார் முதுநகர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்கின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் 4,500க்கும் மேற்பட்டவை, கடலுார் மீன்பிடி துறைமுக பகுதிகள் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.